சீட்டுக் கட்டு மாளிகை சீதனம் இல்லை!

  பாரதி பித்தன்   | Last Modified : 02 Sep, 2019 10:33 pm
indian-economy-analysis

எல்லா வசதியும் கொண்ட குடும்பம் ஒன்று. அந்த அமையார் நினைத்த படி வாழ்வார். பிள்ளைகள் எதைப் பற்றியும் கவலைப்பட்டதில்லை. கேட்கும் முன்பே எதுவேண்டுமானாலும் கிடைக்கும். வசதிக்கு குறைவு இல்லை. மற்றொரு குடும்பம் நாளைக்கு 3 வேளை சாப்பாடு, தீபாவளிக்கு புதுத்துணி. அரசு பள்ளியில் படிப்பு. ஆகாங்கே காரை உடைந்த வீடு. 

இந்த இரு குடும்பத்தையும் பார்ப்பவர்கள் முதல் குடும்பத்தை பணக்கார குடும்பம் என்றும், இரண்டாவது குடும்பத்தை ஏழைகள், பஞ்சப்பராரிகள் குடும்பம் என்றும் உடனே சொல்லிவிடுவார்கள். இந்த இரண்டு குடும்பத்தலைவர்களை பார்க்கும் வரை பொதுவான கருத்து உண்மையாக தோன்றும். முதல் குடும்பத்தலைவர் கடன் வாங்காத இடமே கிடையாது. கோயில் வாசலில் நின்று காணிக்கை போட வரும் பக்தரிடம் கூட சார் பிளீஸ் காணிக்கையை கொடுங்க பத்து நாளில் நானே போட்டுவிடுகிறேன். உங்களுக்கு புண்ணியம் இன்றே கிடைக்கும் படி நான் சாமியிடம் வேண்டிக் கொள்கிறேன் என்று கூட  கடன் வாங்கிவிடுவார். 

அடுத்தவர் சம்பளம் மட்டும் தான் வேறு எந்த வருமானமும் கிடையாது. லஞ்சம் வாங்க மாட்டார். சம்பளத்தை மட்டும் தான் நம்பி குடும்பம் நடத்துகிறார். இப்போது சொல்லுங்கள் இந்த 2 குடும்பங்களில் யார் பணக்காரர் என்று. நீங்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இல்லாத பட்சத்தில் 2 வது குடும்பத்தை தான் தேர்வு செய்வீர்கள். 

காங்கிரஸ் கட்சியினர் மட்டும் முதல் குடும்பத்தை தேர்வு செய்ய அவர்கள் நாட்டையே அப்படித்தானே ஆண்டார்கள். அந்த அனுபவம் அவர்களை அப்படித்தான் கூற வைக்கும். உலகைச் சுற்றிய 3 பிரதமர்கள் ராஜூவ், மன்மோகன் சிங், மோடி. இதில் ராஜூவ் உலகை சுற்றியதன் பலன் கிடைக்கும் முன்பே அவர் இறந்து விட்டார். அடுத்தது மன்மோகன் சிங், மோடி.

இதில் முன்னவர் உலக வரைபடத்தில் ஏதாவது மை துளி சிந்தி இருந்தால் கூட புது நாடு உருவாகி இருக்கிறது என்று நினைத்து கடன் வாங்க கிளம்பி விடுவார். அந்த அளவிற்கு மன்மோகன் சிங் கடன் வாங்காத நாடுகளே கிடையாது. அந்த அளவிற்கு கடன் வாங்கி நாட்டை முன்னேற்ற பாதையில் செலுத்துவது போல நாடகம் நடத்தினார். இதனால் மக்கள் கவலை இல்லாமல் இருந்தனர். லஞ்சம், ஊழல் மட்டுமே நாட்டை ஆண்டது. அசைவம் சாப்பிடாதவன் முனியாண்டி விலாஸ் ஓட்டல் வைத்தது போல ஊழல் செய்யாத மன்மோகனை சுற்றி ஊழல்வாதிகள். போலி நிறுவனங்கள், வரி  ஏய்யப்பு ஊழல்கள் என்று நாட்டின் பொருளாதாரமே சீர் குலைந்து இருந்தது. 

கடந்த காலம் பற்றி வருமானவரித்துறை அதிகாரி சொன்னது இது. ஒரு கட்டிடம் 5 கோடி மதிப்பு கொண்டது என்றால், வங்கி அதிகாரியிடம் லஞ்சம் கொடுத்து 15 கோடி ரூபாய் கடன் பெற்றுவிடுவார். பின்னர் அதை திரும்ப செலுத்தாவிட்டால் வங்கி அந்த கட்டடத்தை ஜப்தி செய்யும். அதாவது கொடுத்த கடன் ரூ. 15 கோடி, ஜப்தி செய்ததன் மதிப்பு 5 கோடி. கடன் வாங்கியவனுக்கு 10 கோடி ரூபாய் லாபம். வங்கிக்கு மீதி தொகை நஷ்டம். இப்படித்தான் இருந்தது கடந்த காங்கிரஸ் ஆட்சி. 

மோடி ஆட்சியில் ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் விஜய் மல்லையா, நீரவ் மோடி உட்பட பல தொழில் அதிபர்கள் கடன் வாங்கியது காங்கிரஸ் ஆட்சியில் தான். அவர்கள் பல நிறுவனங்களை நடத்தினார்கள். பல ஆயிரம் பேர் வேலை செய்தார்கள். பல குடும்பங்கள் வாழ்ந்தன. 
இன்றைக்கு அவர்கள் தொழிலை மூடிவிட்டார்கள். பல குடும்பங்கள் வேலை இழந்துவிட்டன.

 

கடந்த மன்மோகன் சிங் ஆட்சியின் கடைசி காலத்தில் ஜிடிபி 4.5 சதவீதம். பணவீக்கம் 11.5 சதவீதம். நிதி பற்றாக்குறையும் ஜிடிபிக்கு இணையாகத்தான் இருந்தது. பணவீக்கம் 2 இரண்டு இலக்கமாக இருந்த காரணத்தால் விலைவாசி இறக்கை கட்டி பறந்தது. 
வெளிநாட்டு கடன் மட்டுமே இந்தியாவின் செயற்கை சுவாசமாக இருந்தாதல் தான் மன்மோகன் அரசை அகற்ற வேண்டும் என்று மக்கள் முனைப்புடன் செயல்பட்டதனர்.

பிரதமர் மோடியும் கூட ஆட்சிக்கு வந்த புதிதில் உலக நாடுகள் அனைத்திலும் ஒரு சுற்று சுற்றி வந்தார். ஆனால் எந்த நாட்டிலும் கை ஏந்தவில்லை. இதற்கு பின்னர் ஜிஎஸ்டி வரி விதிப்பு, ஆதார் பான் கார்டு இணைப்பு, வருமானவரி தாக்கல் செய்வதை எளிமைப்படுத்தி பெரும்பாலானவர்களை வரி கட்ட செய்தது என்று பொருளாதாரத்தில் தற்சார்பு அடையும் நடவடிக்கைகளை மோடி அரசு அடுத்தது மேற்கொண்டது.

போலி நிறுவனங்கள் மூடப்பட்டன. அதே நேரத்தில் வாராக்கடன்களை செலுத்தாத நிறுவனங்கள் திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. விளைவு நாட்டின் பொருளாதாரம் யதார்த்த நிலைக்கு வந்து விட்டது. இது உண்மையில் சிரமமான விஷயம் தான். ஆனால் நேர்மையை கடைபிடிக்கும் போது இந்த சிரமங்களை அனுபவித்து தான் ஆக வேண்டும். 

லஞ்சம் இல்லாத தேசகம் உருவாக்க தடைக்கற்களாக இருந்த வருமானவரி உட்பட பல நிறுவனங்களில் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரிகள் வீட்டிற்கு அனுப்பட்டனர். இப்படி பொருளாதாரத்தை சீரமைக்கும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் பல முன்பு களத்தில் இருந்த பலர் இப்போது இல்லை.

இந்த சிரமான காலட்டத்தை கடந்தால் பின்னர் பொற்காலம் தான். அதை விடுத்து மன்மோகன் சிங் போல ஆட்சி செய்ய வலியுறுத்தினால் சீட்டுக் கட்டு மாளிகையை நம்பி குடியேறுவதற்கு சமம். புத் புத்திசாலிகள் சீட்டு கட்டு மாளிகையை சீர் தரும் என்று நினைக்கமாட்டார்கள்.  
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close