"சந்திரயான் 2" ஓர் மீள் பார்வை 1

  Newstm Desk   | Last Modified : 06 Sep, 2019 07:31 pm
chandrayaan-2-special-story-1

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, இஸ்ரோவின் கனவு திட்டமான 'சந்திரயான் 2' விண்கலம், ஜூலை 22ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான் விண்கலத்தை சுமந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் 3- ராக்கெட், ஏவப்பட்ட 16 நிமிடத்தில் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. 

இது இந்திய விஞ்ஞானிகளின் மிகப்பெரிய சாதனையாகவே பார்க்கப்படுகிறது . சந்திராயன் 2 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை நட்டு மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

இதே போல் நிலவை ஆராய அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள், 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விண்கலம் அனுப்பிய நிலையில், அதை விட 20 மடங்கு குறைவாக, அதாவது, வெறும் 1,000 கோடி ரூபாய் செலவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட லேண்டர், ரோவருடன், சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. 

ஹாலிவுட் திரைப்படங்களுக்கான தயாரிப்பு செலவை விட குறைவான தொகை செலவழித்து, இந்திய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளதை, அமெரிக்க, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close