நோபல் கமிட்டிக்கு நோக்கம் உள்ளது: இந்தியாவை தரிசாக்கத்தான் இந்த பரிசு!

  பாரதி பித்தன்   | Last Modified : 15 Oct, 2019 06:21 pm
special-article-about-nobel-prize

சுவிடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல், தான் கண்டுபிடித்த அணுகுண்டு, உலகின் ஆக்கத்திற்க்காக அல்லாமல், அழிவுக்கு பயன்படுத்தப்பட்டதை பார்த்து கண்ணீர் வடித்தார். பிராயச்சித்த முயற்சியாக, 1895ம் ஆண்டில், தன் சொத்துக்களை முதலீடு செய்து, அதன் வட்டியை கொண்டு, உலகில் இயற்பில், வேதியியல், இலக்கியம், மருத்துவம், உடலியங்கியல், அமைதி ஆகிவற்றில் ஆய்வுகள், கண்டுபிடிப்புகளை நடத்தியவர்களை கவுரவிக்க சிறப்பு தொகை பரிசாக வழங்க கூறினார். இதுதான் நோபல் பரிசின் வரலாறு. 

ஆட்டுத் தாடிப் போல 1968ம் ஆண்டு சுவிடன் நாட்டின் நடுவண் வங்கியின், 300ம் ஆண்டு நினைவாக பொருளியல் துறையும் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டது. மற்ற துறைகளில் வழங்கும் விருதுகளில் அரசியலோ, தங்களின் சுய விருப்பமோ கலக்க இயலாது. 

ஆனால் பொருளியல் துறையில் அதற்கான வாயப்பு அதிகம். அது தான் நடக்கிறதோ என்று பொளியலுக்கான இந்த பரிசு பெறுபவர்கள் பட்டியலைப் பார்த்தால் தெரிகிறது. அதில் இந்தியா தொடர்பு கொண்டவர்கள் பெறும் போது இந்த சந்தேகம் ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.

இந்து மத்தில் கர்ம யோகம், ஞானயோகம் என்று இரு பிரிவுகள் உள்ளன. இதில் கர்மயோகிகள் தான் நாட்டின் முன்னேற்றத்திற்கு தங்களால் முடிந்தவற்றை செய்வார்கள். ஆனால் இவர்கள் தங்கள் பேச்சைவிட செயல் தங்களை வெளிப்படுத்தும் என்று நம்புவதால் வெளியே தெரியாமலேயே மரித்து விடுவார்கள். 

ஆனால் ஞானயோகிகள் வெறும் வெள்ளைத் தாளை கருப்பாக்குகிறவர்கள். இந்த இடம் காலியாக இருப்பதால் இடதுசாரிகள் சோசலிச வாதிகள், கம்யூனிசத்தையும், சோசலிசத்தையும் கலந்து கூட்டாஞ்சோறு ஆக்கியவர்கள் பிடித்துக் கொண்டார்கள். அவர்கள் லாபி வலுவாக இருப்பதால் இதைத் போன்றவர்கள் நோபல் பரிசு கூட பெருகிறார்கள்.

இந்தியாவின் பொருளாதாரம் கிராமிய சுய சார்பை அடிப்படையாக கொண்டது. அதனால் காந்தி, அப்துல்கலாம் போன்றவர்கள் கிராமங்களை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அப்துல்கலாம் புரா என்ற கிராமங்களுக்கு நகர் புற வசதிகளை ஏற்படுத்தி அதை மேம்படுத்தும் திட்டத்தை கொண்டு வந்தார்.

ஆனால் நம் பொருளாதார மேதைகள் அறைகளுக்குள்ளே ஆய்வு நடத்துவதால், இது பற்றியெல்லாம் அவர்களுக்கு தெரியாது. இந்த ஆண்டின் பொளாதார பிரிவில் நோபல்பரிசு அபிஜித் பானர்ஜிக்கும் அவர் மனைவி எஸ்தர் டாப்லோ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த புலி சொந்த மாநிலம் மேற்கு வங்கம். ஆனால் இன்று அந்த மாநிலம் இருக்கும் நிலையை பார்த்தாலே இந்த புலி என்ன செய்து இருக்கும் என்று தெரியும்.

நடப்பு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 6 ஆயிரம் வழங்க வேண்டும், வருடத்திற்கு ரூ. 72 ஆயிரம் வழங்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். கடந்த 2019ம் ஆண்டு பட்ஜெட்டில் வேட்டி விழுந்த நிலையில் தான் இந்த புலி 3 லட்சத்து 60 ஆயிரம் கோடி செலவு பிடிக்கும் இந்த திட்டத்தை அறிமுகம் செய்தது. 

இதற்கான நிதி வசூல் வரி செலுத்துவோரிடம் இருந்தே திரட்ட வேண்டும். ஏற்கனவே மிகப் பெரிய சுமையை துாக்கி நிற்கும் வரி செலுத்துவோர் மீது இந்த சுமையும் ஏற்றும் அற்புதம் தான் இந்த பொருளாதார புலி செய்தது.

பண மதிப்பு இழப்பால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டது என 2017ம் ஆண்டில் கூறிய அபிஜித் 2019ம் ஆண்டு 3.60 லட்சம் கோடி செலவு பிடிக்கும் திட்டத்தைஆலோனை வழங்குகிறார் என்றால் எந்த அளவிற்கு இவர் பொருளாதாரத்தில் வீக் என்று தெரியும்.

இவருக்கு முன்பு 1998ம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா குமார் சென். இவரது பிறப்பும் கூட மேற்கு வங்காளம் தான். அது என்ன மாயமோ தெரியவில்லை இடதுசாரிகள் பல ஆண்டுகளாக  ஆட்சி செய்த இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் அதற்கு நேர் எதிர் கருத்துக் கொண்ட அமெரிகாவில் குடியேறுகிறார்கள். 

அங்கிருந்து இந்தியாவிற்கு கருத்துக் கூறுகிறார்கள். வறுமையை ஒழிக்க சிறப்பாக திட்டத்தை தீட்டுவதாக நினைத்து பிதற்றல்களை வெளிப்படுத்துகிறார்கள். இது அதிர்ச்சியளிக்கும் விமர்சனமாக கூட இருக்கலாம். ஆனால் இந்த நாட்டை புரிந்து கொள்ளலாமல் ஆலோசனை கூறுவது பிதற்றல் தானே. 

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் சளிக்கு நண்டு சூப் நல்லது தான், சைவ உணவு சாப்பிடுபவருக்கும் சளி பிடிக்கும். அவரிடம் நண்டு சூப் குடிங்க சளிக்கு நல்லது என்று ஆலோசனை கூறுவது எப்படியோ அப்படித்தான் இந்த இடதுசாரி, சோசலிச பொருளாதார புலிகளின் ஆலோசனைகளும்.

பல ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர், சாணக்கியர் போன்வறவர்கள் ஆட்சி எப்படி இருக்க வேண்டும், மக்களை எந்த வழியில் கொண்டு செலுத்த வேண்டும் என்றெல்லாம் உலகத்திற்கே கூறியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னதை கடைபிடித்தால் போதும். இந்தியா உலகிற்கே பொருளாதாரத்தில் வழிகாட்டும். ஆனால் இங்கிருந்து அமெரிக்காவில் சென்று வாழ்பவர்கள் பாராட்டு பெருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இடதுசாரிகள்.

இதில் பொருளாதாரம் என்று அல்ல, அருந்ததிராய் போன்ற எழுத்தாளர்களும் அடக்கம். இந்தியாவின் வளர்ச்சியை கெடுத்து, இங்கு புரட்சி என்ற பெயரில் நம் நாட்டின் உயிர் நாடியான விவசாயத்தை அளித்து, உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் நம்மை, இறக்குமதி செய்யும் நாடக மாற்ற வேண்டும் என்பதே இவர்களின் குறிக்கோள். அப்படிப்பட்டவர்களின் கைக்கூலிகளாக செயல்படுவோருக்கு தான் இலக்கியம் மற்றும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த விருதுகளின் நோக்கம் ஒன்றுதான். அழகிப் போட்டியில் ஒருவரை தேர்வு செய்துவிட்டு அடுத்தவர் வரும் வரை ஊரில் உள்ள உருப்பிடாத பொருட்களை விற்பார் அல்லவா. அதைப் போன்றது தான் இதுவும். இவர்களை உளறவைக்க வேண்டியது. பின்னர் அதை தாங்கி பிடித்து ஜால்ரா ஓசையால் அதை உண்மை என்று மாற்ற வேண்டியது. 

அதன் அபத்தத்தைஉணர்ந்து  அரசாங்கம் கடைபிடிக்காது. உடனே நோபல் பரிசு பெற்றவர்கள் கூறியதையே இவர்கள் கடைபிடிக்க மாட்டேன் என்று கூறுகிறார்கள் என அரசுக்கு எதிராக துாண்டிவிடுவது இது தான் நோக்கம். உண்மையில் இவர்கள் பொருளாதாரப்புலிகள் என்றால் இவர்கள் கொள்கையை எந்த நாடு கடைபித்து உருப்பிட்டு இருக்கிறது என்று சொல்ல வேண்டும் அல்லவா அது கிடையாது.

இந்தியாவில் கடந்த ஆட்சியில் எளிய மக்களுக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டது. இதை பல்வேறு காரணங்களை காட்டி 4 ஆண்டுகள் நடைமுறைப்படுத்தால் செய்தவர் பொருளாதார புலி ரகுராம்ராஜன். இந்த நாட்டில் பண மதிப்பு இழப்பு நடவடிக்கை,  இந்த நாட்டின் பொருளாதாரத்தில் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று விமர்சனம் செய்பயப்டுகிறது. 

ஆனால் கள்ளப் பணம் வைத்திருந்தவர்கள், கள்ள சந்தையில் பொருட்கள் விற்பனை செய்வதர்கள் எல்லாம் தங்கள் பணத்தை கணக்கு காட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். மேலும் ஜிஎஸ்டிக்கு பி்ன்னால் பலர் பில் போடவே தொடங்கி உள்ளனர். இது போன்ற ஆலோசனைகளை தருபவர்கள் பொருளாதாரப் புலிகள் கிடையாது. 

அதை விடுத்து ரஷ்யா, சீனா,கியூபா போன்ற நாடுகள் புறந்தள்ளியவற்றை ஆலோசனைகளாக கூறுபவர்கள் அனைவரும் பொருளாதாரப் புலிகள். அவர்களுக்கு நோபல் பரிசு உட்பட அனைத்தும் கிடக்கும். அதற்கு காரணம் இந்தியாவின் இறையாண்மையை சிதைக்க வேண்டும் என்பது தான். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத ஒரு அரசு அமைந்தது இந்தியாவிற்கு இறைவன் கொடுத்த கொடை.

இது போன்றவர்களுக்கு எல்லாம் நோபல் பரிசு கொடுப்பதைப் பார்த்தால், இதற்காகவா நான் என் சொத்துக்களை எல்லாம் முதலீடு செய்தேன் என்று நிச்சயம் ஆல்பிரட் நோபில் அழுவது என்னவோ நிச்சயம்.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close