இந்திய வரலாற்றில் மிக முக்கிய பங்கு வகிக்கும் அயோத்தியா வழக்கில் கடந்த சில நாட்கள் முன்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, சர்ச்சைக்குரிய நிலம் அரசாங்கத்திற்கே சொந்தம் என்றும், அங்கு ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளை தொடங்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், இஸ்லாமியர்களுக்கென்று அயோத்தியாவில் தனியாக 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த ராம்ஜன்ம பூமி வழக்கு தற்போது முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், கி.பி. 20ஆம் நூற்றாண்டுகளிலேயே அயோத்தியா குறித்து மிக துல்லியமாக கணித்துக்கூறியுள்ள எழுத்தாளர் "சர் வித்யாதர் சுராஜ் பிரசாத் நைபால்" அவர்களுடன் "டைம்ஸ் ஆப் இந்தியா"வின் திலீப் பத்கோங்கர் மேற்கொண்டிருந்த ஓர் கலந்துரையாடல் :
கலந்துரையாடலுக்குள் செல்வதற்கு முன்பு, வி.எஸ். நைபால் யார் என்பதை நாம் அறிய வேண்டும்.
எழுத்தாளரான வி.எஸ். நைபால் கடந்த 1932 ஆம் ஆண்டு டிரினிடாடில் பிறந்து வளர்ந்து ஒர் பிரித்தானியர் ஆவார். இவரது முன்னோர்கள் இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்து இங்கிலாந்து சென்றவர்கள். ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் ஆங்கில இலக்கியம் பயின்றவர். மிக சிறந்த எழுத்தாளரான இவர், பல இலக்கிய நூல்களும், புதினங்களும் எழுதியுள்ளார். மேலும், கடந்த 2001 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசும் பெற்றுள்ளார்.
தற்போது அவர்கள் இருவருக்கும் இடையேயான கலந்துரையாடலுக்குள் செல்வோம் :
திலீப் பத்கோங்கர் : சோவியத் ஒன்றியத்தின் சரிவு, மத்திய ஆசியாவில் தொடர்ச்சியாக ஏற்பட்ட இஸ்லாமிய நாடுகளின் எழுச்சி, சல்மான் ருஷ்டி விவகாரம், இந்தியாவில் முஸ்லிம்களினால் ஏற்பட்டிருந்த துன்புறுத்தல்கள், போன்றவற்றால் பிரிந்திருக்கும் இந்துக்களால், இஸ்லாமியர்களை ஒன்றுமே செய்ய இயலாது என்ற கருத்து நிலவி வருகிறது. நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள் ??
வி.எஸ். நைபால் : இந்தியாவில் சுதந்திர போராட்ட நாட்களில் மஹாத்மா காந்தி மதத்தை ஓர் ஆயுதமாக கொண்டு மக்களை ஒன்று திரட்டினார். அப்போது சுதந்திரம் என்ற ஒன்றிற்காகவே அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இப்போதுதான் மக்கள் முழுமையாக உணர தொடங்கியிருக்கின்றனர், இந்தியா எவ்வளவாக அழிக்கப்பட்டிருக்கிறது என்பதை. இதற்கு மக்களின் அறியாமையை காரணமாக கூற முடியாது. இந்திய சமூகத்தின் தன்மையும் இதற்கு ஒர் காரணமே.
நீங்கள் கூறியதை நான் சற்று வித்தியாசமாகவே பார்க்கிறேன்.நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து எடுத்துக்காட்டுகளையும் மேலோட்டமாக பார்த்தால் நீங்கள் குறிப்பிட்டது சரிசென்று தோன்றினாலும், தற்போது இந்தியாவில் வரலாற்று மிக்க எழுச்சிதான் நடைபெற்று கொண்டிருக்கிறது.
தொடரும்.........
ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2!!!
ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3!!!
ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4!!!
ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5!!!
Newstm.in