ராம்ஜன்ம பூமி இயக்கத்தில் மறக்க முடியாத முகமாக திகழ்ந்து வந்த அஷோக் சிங்கால் - பகுதி 2 !!!

  அபிநயா   | Last Modified : 19 Nov, 2019 03:56 pm
remembering-the-chief-architect-of-the-ram-janmabhoomi-movement-on-his-death-anniversary

கடந்த 1984ஆம், விஷ்வ ஹிந்து பரிஷத்தின் செயலாளராக அஷோக் சிங்கால் பொறுபேற்றதை தொடர்ந்து, ராம்ஜன்ம பூமி பிரச்சனை குறித்து விவாதமும் தொடங்கியது. பல ஹிந்துக்களின் ஆதரவை பெற்ற  இந்த தர்ம சன்சாத்தை தொடர்ந்தே ராம்ஜன்ம பூமி விவகாரம் ஓர் எழுச்சியுறும் இயக்கமாக மாறியது.

கடந்த 1989 ஆம் ஆண்டு வரை ராம்ஜன்ம பூமி ஓர் விவகாரமாகவே இருந்து வந்தது. ராமர் பிறந்த இடம் என்று ஹிந்துக்களின் நம்பிக்கையாக திகழும் அயோத்தியாவில், அவர்களின் நம்பிக்கையை உடைத்தெறிவது போல் ஓர் மசூதியை கட்டுவதா என்ற கோபமும் கொந்தளிப்பும் அனைவரது மனதிலும் கனன்றுக் கொண்டிருந்த போதும், அதை ஓர் இயக்கமாக மாற்றி, அவற்றிற்கு தகுந்த உருவமளித்தவர் அஷோக் சிங்கால். 

ஹிந்து கொள்கைகளை பெரும்பாண்மையான மக்களிடம் கொண்டு சேர்த்தோடு மட்டுமில்லாமல், எதற்காக இந்த இயக்கம், எதை நோக்கிய பயணம் இது என்பதை அனைவருக்கும் விளக்கியவர் இவர். ராம்ஜன்ம பூமி இயக்கத்திற்கும், பாரதிய ஜனதா கட்சிக்குமிடையே ஓர் பாலமாக திகழ்ந்ததும் இவரே. அயோத்தியா குறித்த இவரின் விளக்கத்தை தொடர்ந்தே, கடந்த 1989ஆம் ஆண்டு பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் ராம்ஜன்ம பூமி மீட்டெடுக்க வேண்டும் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டது. 

இதனிடையில், கடந்த 1984ஆம் ஆண்டின் தர்ம சன்சாத்தில் தொடங்கி, 1992ஆம் ஆண்டு ராம்ஜன்ம பூமியில் மேற்கொள்ளப்பட்டுள்ள அழிவு வரை அனைத்திலும் இவரது பங்கே மிகையாக காணப்படுகின்றதென்றும், இவரை கைது செய்வதன் மூலம் பல ஆண்டுகளாக தொடர்ந்து வரும் பிரச்சனைக்கும் ஓர் தீர்வு கிடைக்கும் என்ற சிந்தனையுடன் இவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அப்போதைய தேர்தலில் வெற்று பெற்று பாஜக ஆட்சியில் அமர்ந்தது. ்யோத்தியா விவகாரத்தில் அப்போதைக்கு எந்த மாற்றமும் நிகழவில்லை. இதை தொடர்ந்து, தனது மனசாட்சிக்கு பதிலளிக்க வேண்டுமே என்று அதற்கு கட்டுப்பட்டு வாழும் வெகு சிலரில் ஒருவரான அஷோக் சிங்கால், ராம்ஜன்ம பூமியை பின்புலமாக கொண்டு ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி அதை மீட்டெடுப்பதற்கான வேலைகளை சரிவரி செய்வதில்லை என்று எண்ணினார்.

இந்த காரணத்தினால், பாரதிய ஜனதா கட்சியுடனான இவரது நட்புறவு படிப்படியாக குறைய தொடங்கியது. 

ராம்ஜன்ம பூமி இயக்கத்தில் மறக்க முடியாத முகமாக திகழ்ந்து வந்த அஷோக் சிங்கால் - பகுதி 1 !!!

தொடரும்.........

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close