ராம்ஜன்ம பூமி இயக்கத்தில் மறக்க முடியாத முகமாக திகழ்ந்து வந்த அஷோக் சிங்கால் - பகுதி 3 !!!

  அபிநயா   | Last Modified : 22 Nov, 2019 05:13 pm
remembering-the-chief-architect-of-the-ram-janmabhoomi-movement-on-his-death-anniversary

ராம்ஜன்ம பூமியை பின்புலமாக கொண்டு ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி அதை மீட்டெடுப்பதற்கான வேலைகளில் முழு மூச்சுடன் ஈடுபடுவதில்லை என்று கருதிய அஷோக் சிங்கால், பாஜகவுடனான தனது பேச்சு வார்த்தையை படிப்படியாக குறைத்து கொண்டார். 

இதை தொடர்ந்து, அயோத்தியாவை மீட்டெடுக்க தானே முன்வருவதாக கூறி உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். டிசம்பர் 6, 1992 மற்றவர்கள் குறிப்பிடுவது போல ஹிந்துக்களுக்கு துக்கமான நாள் இல்லை எனவும், நமது உரிமைக்காக நாம் முழு மூச்சுடன் செயல்பட தொடங்கிய இந்த தினத்தை "ஷௌரிய திவாஸ்" ஆக ஹிந்துக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என்று கூறினார் அஷோக் சிங்கால். 

அன்று தொட்டு பாஜகவின் மேல் இருந்த அதிருப்தி, பிரதமராக நரேந்திர மோடி பதிவியேற்ற பின்னர் தான் குறைந்தது இவருக்கு. மோடியின் வெற்றி ஓர் வளர்ச்சி நோக்கிய பாதை மாற்றத்திற்கான பயணம் என்றே அவர் கூறினார். 2030ஆம் ஆண்டிற்குள் மொத்த உலகமும் இந்துக்களின் தேசமாக இருக்கும் என்றும் அதற்கான பாதை தான் பிரதமர் மோடி என்றும் கூறினார். நரேந்திர மோடியின் பிரதமர் பதவி, இந்தியாவின் 800ஆண்டு கால அடிமை வாழ்க்கைக்கு கிடைத்த விடிவு காலம் என்று அவர் முழுமையாக நம்பினார்.

ஓர் கொள்கையாக மட்டுமே இருந்து வந்த ஹிந்துத்துவத்தை, மாபெரும் சக்தியாக மாற்றியதில் அஷோக் சிங்காலிற்கு பெரும் பங்கு உண்டு என்பதே உண்மை. 1980 களில் தமிழ்நாட்டின் மீனாட்சிபுரத்தில் பழங்குடியினர் கோவில்களுக்குள் அனுமதியில்லை என்ற சட்டம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. தமிழ்நாட்டில் மட்டுமில்லை, இத்தகைய செயல்கள் இந்தியாவின் பல பகுதிகளில் கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. எனினும், மீனாட்சிபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த அத்தகைய பழக்கத்தை மாற்றி அவர்களுக்காக 200 கோவில்களை கட்டிய முதலே தொடங்கியது இவரது ஹிந்துத்தவா பயணம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close