• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

பாலியல் வன்கொடுமை புகார்... கருவை பையில் கொண்டு வந்த பெண்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 23 Jul, 2018 01:23 pm

19-year-old-rape-victim-reaches-police-station-in-up-with-foetus-in-bag

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில் பெண் ஒருவர் 5 மாத கருவை ஒரு பையில் எடுத்து வந்து காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம், அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் கொட்வாலி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது தாயுடன் காவல் நிலையத்திற்கு வந்தார். பெரிய பார்சலுடன் வந்த அவர், தன்னை இளைஞர் ஒருவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக புகார் அளித்தார். அதற்கு ஆதாரமாக அவர் கொண்டுவந்திருந்த பார்சலை திறந்து கலைக்கப்பட்ட கருவையும் காண்பித்தார். இதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணையில், அந்த பெண்ணின் வீட்டுக்கு அருகே வசித்த வந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும். திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி தன்னை பாலியல் தேவைக்கு பயன்படுத்திக்கொண்டதாக கூறினார். கருத்தரித்தலை தடுக்க கட்டாயப்படுத்தி மாத்திரை மருந்துகளை அவர் கொடுத்து வந்திருக்கிறார். இருப்பினும் தான் கர்ப்பமானதாகவும், கருவை கலைக்க மாத்திரை மருந்துகளை கட்டாயப்படுத்தி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அந்த இளைஞரைத் தேடி வருகின்றனர். போலீஸ் நிலையத்துக்கு சிதைக்கப்பட்ட சிசுவுடன் இளம் பெண் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close