இல்லறம் இனிக்க உதவும் எளிய மூலிகைகள்!

  Newstm Desk   | Last Modified : 23 Aug, 2018 10:38 am
herbs-that-could-increase-your-potency

இன்றைக்கு குழந்தையின்மை பிரச்னை அதிகமாகக் காணப்படுகிறது. இந்தப்பிரச்னைக்கு முற்காலங்களில் பெண்களைக் குறை சொன்னார்கள். ஆனால், இன்றைய சூழலில் உணவுமுறைகளும், மதுப்பழக்கமும் ஆண்களுக்கு விரைப்புத்தன்மையில் குறையை ஏற்படுத்துவதுடன் விந்துக்குறைபாடு, உடலுறவில் விருப்பமின்மை போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இவற்றுக்கெல்லாம் எளிய வைத்திய முறைகள் உள்ளன.


அம்மான் பச்சரிசி இலையை பறித்து காய வைத்து தூளாக்கி அதில் ஒரு டீஸ்பூன் வீதம் எடுத்து சம அளவு கற்கண்டு சேர்த்து காலை, மாலை சாப்பிட வேண்டும். சாப்பிட்டதும் வெதுவெதுப்பான பாலைக் குடித்து வந்தால் போதுமான அளவு சக்தி கிடைக்கும்; ஆண்மைக்குறை நீங்கும். இதேபோல் ஓரிதழ் தாமரை என்ற செடியின் இலையைப் பறித்து பச்சையாகவோ அல்லது காய வைத்தோ ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து பனங்கற்கண்டு சேர்த்து காலை,மாலை சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் குறைந்து சிறுநீர் தாராளமாகப் போகும்; உடலில் போதுமான அளவு சக்தி அதிகரிக்கும்.


அதிமதுரம் பொடியை பாலில் கலந்து தேன் சேர்த்துக் குடித்து வரலாம். கனிந்த வாழைப்பழங்கள் குறிப்பாக செவ்வாழைப் பழத்தை இரவில் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் தாம்பத்திய உறவில் போதுமான அளவு விருப்பம் உண்டாகும். முருங்கைப்பிசினை மண் பானையில் போட்டு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி காலையில் இரண்டு அவுன்ஸ் அளவு எடுத்து கற்கண்டு சேர்த்து குடித்து வருவதும் பலன் தரும். நாயுருவி விதை, வெங்காய விதை, நீர்முள்ளி விதை, முருங்கை விதை, முருங்கைப்பிசின் தலா 30 கிராம் அளவு எடுத்து பசும்பால் விட்டு அரைத்து சுண்டைக்காய் அளவு மாத்திரை போல் செய்து நிழலில் காய வைக்க வேண்டும். இதில் காலை, மாலை ஒரு  மாத்திரை வீதம் சாப்பிட்டு பசும்பால் குடிக்க வேண்டும். இது உடலுக்கு போதிய சக்தி தருவதுடன் தாம்பத்தியத்தில் விருப்பம் உண்டாகும்.


- தமிழ்க்குமரன், மூலிகை ஆராய்ச்சியாளர்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close