அசத்தும் 'Google Assistant' சேவை

  varun   | Last Modified : 17 Oct, 2016 04:57 pm
சமீபத்தில் வெளியாகியுள்ள கூகுள் பிக்சல் மொபைல்களில் புதிய மெருகேற்றப்பட்ட 'Google Assistant' சேவை வழங்கப்படுகிறது. இதன் சிறப்பம்சங்கள் இதோ: * இந்த புதிய விர்ச்சுவல் அசிஸ்டெண்ட்டிடம் தொடர்ச்சியான உரையாடலை மேற்கொண்டு தகுந்த பதில்களை பெறவியலும். * இதன் மூலம் உங்கள் மொபைலில் உள்ள ஓலா, உபேர், மியூசிக் மற்றும் வீடியோ ஆப்களை உங்கள் குரல் மூலமாகவே இயக்க முடியும். * இந்த அசிஸ்டெண்ட் ஆப்பை நீங்கள் எவ்வளவு பயன்படுத்துகிறீர்களோ அவ்வளவு துல்லியமான நீங்கள் எதிர்பார்க்கும் பதில்களை அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. * குறிப்பிட்ட மின்னஞ்சலை அந்த நபரின் பெயர் அல்லது மின்னஞ்சலின் குறிப்புகளை அளித்தாலே இந்த விர்ச்சுவல் அசிஸ்டெண்ட் நொடிப்பொழுதில் அதை கண்டறிந்து கொடுத்துவிடும். அது போல நீங்கள் செலுத்த வேண்டிய மொபைல், மின்சார, கடன் அட்டை கட்டணங்கள் குறித்த தகவல்களையும் பெறவியலும். * கூகிள் நிறுவனம் தனது விர்ச்சுவல் அசிஸ்டன்ட்டை 70 பில்லியனுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்கும் வகையில் உருவாக்கியுள்ளது. * நமது உரையாடல்களின் மூலம் இந்த விர்ச்சுவல் அசிஸ்டெண்ட் நமக்கு தேவையான நிகழ்ச்சிகள், வானிலை, ஹோட்டல் குறித்த விவரங்கள் போன்றவற்றை தானாகவே அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close