தினசரி காலையில் ட்ராஃபிக்கில் சிக்கிக் கொள்ளாமல் எப்படியாவது வேலைக்கு சென்று விட வேண்டும் என்று நினைத்தாலும், ட்ராஃபிக் அதிகமான இடங்களை கண்டறிவது கடினமான வேலையாகிவிட்டது. தற்போது இதற்கு தீர்வாக, கூகுள் நிறுவனம், ‘Traffic nearby’ எனும் வசதியை கூகுள் மேப்பில் அறிமுகப் படுத்தி உள்ளது. version 9.39-ல் வெளிவந்துள்ள இந்த வசதியின் மூலம் தற்சமயம் நம்மை சுற்றியுள்ள சாலைகளில் எங்கு எல்லாம் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது என்பதை ஒரே க்ளிக் செய்து அறிந்து கொள்ள முடியும். டிரைவிங் மோட், சேரும் இடம் போன்றவற்றை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.