இந்தியாவின் முதல் எரிபொருள் இல்லா பேருந்து

Last Modified : 18 Oct, 2016 01:48 pm

அசோக் லெய்லாண்ட் நிறுவனம் இந்தியாவின் முதல் மின்சக்தியால் ஒடக் கூடிய பேருந்தை சென்னையில் அறிமுகப் படுத்தியது. முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட இப்பேருந்து ஒரு முறை சார்ஜ் செய்தால் 150கி.மீ தூரம் வரை செல்லும். இந்த நிதியாண்டில் 50 பேருந்துகளும், அடுத்த நிதியாண்டிற்குள் 200 பேருந்துகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்தியா முழுவதும் இப்பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தால் இந்திய அரசிற்கு எரிபொருள் இறக்குமதியில் 8 லட்சம் கோடி ரூபாய் வரை மிச்சமாகும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close