இன்று பெண்களைத் தாக்கும் கொடிய நோய்களில் மார்பகப் புற்றுநோயும் ஒன்று. மார்பகப் புற்றுநோய் வருவதற்கு எச்.ஈ.ஆர்.2 என்ற ஜீனே பிரதான காரணம். தாய்மை அடையாத பெண்கள், பரம்பரைக் காரணங்கள், சிறு வயதில் பூப்பு அடைவது மற்றும் நீண்ட நாட்கள் கழித்து மெனோபாஸ் அடைவது, அதிக உடல் எடை, மதுப்பழக்கம், புகைப்பழக்கம் ஆகியவையும் மார்பகப் புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணங்களாகும். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகரிக்கும் போதும் கேன்சர் செல்களின் வளர்ச்சி அதிகரிக்கிறது. இதனால் பருவ பெண்கள் மார்பகத்தில் ஏற்படும் சிறு கட்டிகளையும் கவனித்தல் வேண்டும்.