பவர்பேங்க் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை

  varun   | Last Modified : 02 Nov, 2016 04:16 pm
* பவர்பேங்க்கை வாங்குபவர்கள் முக்கியமாய் கவனிக்க வேண்டியது அதன் திறன்தான் (capacity). இது mAh என்னும் அலகால் அளக்கப்படும். இதனைப் பொறுத்தே உங்கள் பவர்பேங்க்கின் திறன் இருக்கும். அதிக திறன் இருக்கும் பவர்பேங்க் மூலம், மொபைலை அதிக நேரம் சார்ஜ் செய்யலாம். * உங்களுக்கு ஏற்ற பவர்பேங்க் எது என்பதை உங்கள் கருவி, சார்ஜ் ஏற்றும் நேரம், பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்தே தீர்மானியுங்கள். தேவைக்கு அதிகமாக, அதிக திறன் (mAh) உள்ள பவர்பேங்க் வாங்குவதும் வீண்தான். * விலை மலிவான பவர்பேங்க்குகளை வாங்கினால், உங்களது விலை அதிகமான கேட்ஜெட் பாதிக்கப்படலாம். மேலும் பவர் பேங்க் வெடிக்கவும் வாய்ப்பு உண்டு. அதனால் தரமான, நம்பகமான நிறுவனங்களின் பவர்பேங்க்குகளைப் பார்த்து வாங்க வேண்டும். * ஒரே நேரத்தில் 2 மொபைல்களை இணைக்கும் வசதி, சார்ஜிங் போர்ட்டுகள் என உங்களது வசதிக்கு ஏற்றபடி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். * பவர்பேங்க் வாங்கும்போது பேட்டரி அளவினை அறிந்துக்கொள்ள, தெளிவான எல்.இ.டி விளக்குகள் இருப்பதை தேர்வு செய்யலாம். * பவர்பேங்க் வாங்கும்போது, நம்பகமான இணையதளங்கள், கடைகளில் இருந்து மட்டுமே வாங்குவதால், கூடிய மட்டும் போலியான பவர்பேங்க்குகளை தவிர்க்கலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close