காஸ்மிக் கதிர்களின் கசிவால் பூமிக்கு ஆபத்தா?

  jerome   | Last Modified : 08 Nov, 2016 01:17 pm
ஊட்டியில் உள்ள டாடா ஆய்வு மையம், இந்தியாவின் "கிரேப்ஸ் - 3 மியான்" தொலைநோக்கி வழியாக நடத்திய சமீபத்திய ஆய்வில், புவியின் காந்த அடுக்குகளில் விரிசல் ஏற்பட்ட இடத்தை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் காஸ்மிக் கதிர்கள் நுழைந்து அதிக பாதிப்புகள் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2015ல் வீசிய சூரிய கதிர்வீச்சு புயலை பற்றி ஆராய்ச்சி செய்தபோது இந்த விரிசல் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 2.5 மில்லியன் கி.மீ வேகத்தில் வீசிய அந்த புயல், புவியின் அரணாக இருக்கும் காந்த அடுக்குகளில் அதிக தாக்கத்தை செய்து புவிகாந்த புலத்தின் (magnetospere) அடர்த்தியை 11 லிருந்து 4 மடங்காக சுருக்கியதாக பல விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதனால், பூமியில் தொழில்நுட்பம், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு என பல சேவைகள் அப்போது தடைப்பட்டன. அதுபோல மீண்டும் சூரிய கதிர்வீச்சு புயலால் காஸ்மிக் கதிர்கள் வீசினால் கடும் பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் தங்கி ஆய்வு செய்யும் விண்வெளி ஆய்வாளர்களுக்கு அதிக அளவில் பாதிப்புகள் ஏற்படுமாம். பூமியில் பருவநிலை மாற்றங்களும், உயிரினங்களுக்கு புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close