உலகின் பாதுகாப்பான ஆண்ட்ராய்டு போன்கள் ப்ளாக்பெர்ரி DTEK50, DTEK60

Last Modified : 07 Nov, 2016 05:01 pm

ப்ளாக்பெர்ரி நிறுவனம், உலகின் மிக பாதுகாப்பான ஆண்ட்ராய்டு மொபைல் என அந்நிறுவனத்தால் அழைக்கப்படும், DTEK50 மற்றும் DTEK60 எனும் இரண்டு புதிய ஆண்ட்ராய்டு போன்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இது யாராலும் ஹேக் செய்ய முடியாத அளவு, மற்ற ஆண்ட்ராய்டு போன்களை விட பல மடங்கு பாதுகாப்பாக இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. DTEK50 மொபைலில், 5.2 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 13MP பின்பக்க கேமரா, 8MP முன்பக்க கேமரா, 3ஜிபி RAM, 16ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 2TB எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், சிங்கள் சிம், Quick Charge 2.0 உடன் கூடிய 2610mAh இன்பில்ட் பேட்டரி, Wi-Fi 802.11ac, FM radio, Bluetooth v4.2, GPS/ A-GPS போன்றவை உள்ளன. இதன் விலை 21,990 ரூபாயாகும். DTEK60 மொபைலில் 5.5 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 4ஜிபி RAM, 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 2TB எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 21MP பின்பக்க கேமரா, 8MP முன்பக்க கேமரா, Quick Charge 3.0 உடன் கூடிய 3000mAh இன்பில்ட் பேட்டரி, 4G LTE, Wi-Fi, Bluetooth v4.2, GPS போன்ற அம்சங்களும் உள்ளன. இதன் விலை 46,990 ரூபாய் மட்டுமே. இது அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வரவுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.