ரிலையன்ஸ் நிறுவனத்தின் 'லைப்' போன் வெடித்தது!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக 'லைப்' மொபைல் போன் ஒன்று நேற்று வெடித்து தீப்பிடித்து எரிந்துள்ளது. தன்வீர் சாதிக் என்பவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், வெடித்த தனது போனின் படங்களை பகிர்ந்து சம்பவத்தை பற்றி எழுதியிருந்தார். இதற்கான காரணத்தை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. செப்டம்பர் மாதம் இதே போல் 'லைப் வாட்டர் 1' என்ற போன் வெடித்தது குறிப்பிடத் தக்கது. சமீபத்தில் பல 'சாம்சங் கேலக்சி நோட் 7' போன்கள் பேட்டரி பிரச்னையால் வெடித்ததை தொடர்ந்து அந்த போன் உற்பத்தியை சாம்சங் நிறுத்தி, விற்ற போன்களையும் திரும்பப் பெற்றது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close