சாதாரணமாக நம் வீடுகளில் வளர்க்கும் அலங்கார மீன் வகைகளில் ஒன்று "ஜீப்ரா ஃபிஷ்". இப்போது, இந்த மீன், மருத்துவத்துறைக்கு பெரும் சவாலாக இருந்த தண்டுவட பிரச்சினைக்கு தீர்வாக அமைகின்றது. இதில் உள்ள திசு இணைப்பு வளர்ச்சி (CTGF), நம் தண்டுவட திசுவுடன் 90% பொருந்தி போகிறதாம். அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். பாலூட்டி வகை உயிரினங்களில் தண்டுவட பிரச்சினைக்கு தீர்வு காண்பது கடினமான ஒன்று. ஆனால், இந்த சிறிய மீன் மூலம் தீர்வு கிடைத்திருப்பது மீள் உருவாக்கத்திற்கு இயற்கை கொடுத்த அற்புதமான வரம்.