ஆண்-பெண் மூளை வித்தியாசம்

  varun   | Last Modified : 08 Nov, 2016 04:00 pm
மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். இதற்கு ஆணின் மூளையும் பெண்ணின் மூளையும் வெவ்வேறு விதமாக செயல்படுவதே காரணம். பெண்களின் மூளை அமைப்பு 3 மையங்களை கொண்டதாக இருக்கிறது. முதல் மையம் உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. 2வது மையம் மொழிவளத்துக்கானது. இது வார்த்தைகளையும் உரையாடலையும் ரசிக்கும் தன்மை கொண்டது. 3வது மையம் முகத்தின் சாயலை கொண்டு ஒருவரை துல்லியமாக எடைபோடும் தன்மை கொண்டது. ஆண் மூளையில் இந்த 3 வகையான மையங்களும் வேறுவிதமாக செயல்படுகிறது. ஒரு விஷயத்தை பெண் பேசுவதுபோல் ஆண்களால் விவரித்து, கொஞ்சம் ‘வளவள’வென்று இழுத்து கூற முடிவதில்லை. எதிராளியின் முக அமைப்பை கொண்டு அவர் மனதை புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆணுக்கான மூளை அமைப்பு கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. பெரும்பாலும் அழகான பெண்களையே ஆண்கள் விரும்புவதற்கு மூளையே காரணம். ஆனால், பெண்ணின் மூளைக்கு பார்வை இன்பம் என்று ஒன்று இல்லை. அதனால் பெண்ணுக்கு பார்ப்பதால் மகிழ்ச்சி கிடைப்பதில்லை. பேச்சு மூலம்தான் மகிழ்ச்சியடைகிறது. இதனாலேயே அழகானவரை காட்டிலும் ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஆணை பெண்களுக்கு பிடிக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close