இயற்கையின் உதவியால் நேர்ந்த கண்டுபிடிப்புகள்- பாகம் 1

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மனிதன் நிகழ்த்திய பல்வேறு அற்புத கண்டுபிடிப்புகள் இயற்கையை கூர்ந்து நோக்கியே உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு: * 'புல்லட்' ரயில், காற்றை கிழித்து செல்லும் போது சத்தம் ஏற்படாமல் இருக்க, ரயிலின் முன்பகுதி மீன்கொத்தி பறவையின் அலகை ஒத்து உருவாக்கப்பட்டுள்ளது. * மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 'பயோனிக்' வகை கார்கள் எரிபொருள் சிக்கனத்திற்காக மஞ்சள் நிற 'பாக்ஸ்' மீனின் உடல் தோற்றத்தை ஒத்து செய்யப்பட்டது. * அமேசானின் kindle e-Readerகளில் படிப்பவர்களின் கண்கள் கூசாமல் இருக்க, அவற்றின் திரையில் பட்டாம்பூச்சியின் சிறகுகள் ஒளியினை பிரதிபலிக்கும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. * சிலந்திகள் தங்கள் வலைகளின் மீது பறவைகள் மோதாமல் இருக்க, புற ஊதா கதிர்களை வெளியிடும் இழைகளை கொண்டு பின்னுகின்றன. அதையே அடிப்படையாய் கொண்டு பறவைகள் வந்து மோதாமல் இருக்கும்படி நவீன கட்டிட கண்ணாடிகள் தயாரிக்கப்படுகின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close