14 ஆம் தேதி ரெடியா இருங்க 'சூப்பர் மூன்' பார்க்க!!!

  mayuran   | Last Modified : 08 Nov, 2016 05:52 pm
பௌர்ணமி நாளில் இருக்கும் நிலவின் வெளிச்சத்தை விட 30 மடங்கு வெளிச்சத்தில் 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் நிலவு வரும் 14ஆம் தேதி நாம் காணலாம் என நாசா விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலவை 'சூப்பர் மூன்' என்று அழைக்கின்றனர். பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வரும் நிலவானது குறிப்பிட்ட நீள்வட்டப்பாதையில் செல்லாமல் அதில் இருந்து விலகி சில நேரங்களில் பூமிக்கு அதன் தொலைவில் இருந்து 48 ஆயிரம் கிலோமீட்டர் அருகில் வந்து செல்லும். அப்போதே இது போன்ற நிலவை நாம் காணக்கூடியதாக இருக்கும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த 'சூப்பர் மூன்' துபாய் நேரப்படி மாலை 5.52 மணிக்கு முழுமையாக காட்சி தர உள்ளது. அதே நேரம் இந்தியாவிலும் காணலாம் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வு 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close