யூடியூப்பில் மேலும் ஒரு புதிய வசதி

  mayuran   | Last Modified : 10 Nov, 2016 03:46 pm

இணைய உலகில் முன்னணி வீடியோ பகிரும் தளமான யூடியூப் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து பயனர்களைக் கவர்ந்து வருகின்றது. தற்போது HDR தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோக்களையும் தரவேற்றம் செய்து கொள்ளக்கூடிய வசதியினை பயனர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. HDR என்பதன் விரிவாக்கம் High Dynamic Range ஆகும். இதன் ஊடாக மேம்படுத்தப்பட்ட பல வர்ணங்களைக் கொண்ட வீடியோக்களை உருவாக்க முடியும். இதன் காரணமாக காட்சிகள் மிகவும் தத்துரூபமான முறையில் படமாக்கப்படும். இவ்வாறான வீடியோக்களை Chromecast Ultra மற்றும் 4K HDR சாதனங்களின் ஊடாக பார்த்து மகிழ முடியும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.