புராதன பொருட்களின் வயதை கண்டறிய புதியமுறை

  jerome   | Last Modified : 10 Nov, 2016 03:25 pm
தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டறியப்படும் குகை ஓவியங்கள், மண்பாண்டங்கள், சிற்பங்கள் போன்ற பொருட்களை ஆராய்வதன் மூலம் அவை எந்த காலகட்டத்தை சேர்ந்தவை என்று கணிக்கப்படுகின்றன. அவ்வாறு அதன் வயதை கண்டறிய ரேடியோ கார்பன் முறை பயன்படுகின்றது. தற்போது, accelerator mass spectrometry என்ற புதிய முறை உருவாக்கப்பட்டு உள்ளது. முந்தைய முறையை காட்டிலும் மிக சிறந்ததான இது அதிக நுண்ணுர்வு திறன் உடையது. மேலும், இதற்கு 0.05 மி.கி அளவே கார்பன் தேவைப்படும். இதுபற்றி தொல்பொருள் ஆய்வாளர் மார்வின்.W.ரோவ் கூறுகையில், "இதுவரை தொல்பொருட்களின் வயதை கண்டறிய சரியான முறைகள் பயன்படுத்தபடவில்லை. அதனால், பல வரலாறுகளை தெளிவாக ஆராய முடியவில்லை. இந்த கண்டுபிடிப்பின் மூலம் உலகெங்கும் மறைந்து கிடைக்கும் பல தொன்மையான வரலாறுகளை தெரிந்து கொள்ள முடியும்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close