இயற்கையின் உதவியால் நிகழ்ந்த கண்டுபிடிப்புகள்- பாகம் 2

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இயற்கை தன்னுள் அடக்கியுள்ள எண்ணிலடங்கா ஆச்சரியங்களை அடிப்படையாய் கொண்டு மனிதர்கள் பல்வேறு சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளனர். அத்தகைய கண்டுபிடிப்புகள் குறித்த எங்கள் முந்தைய கட்டுரையின் தொடர்ச்சியை கீழே காணலாம்: * 'Gecko' எனும் ஒரு வகை பல்லியினம், உடும்பு போன்ற உறுதியான கால் பிடியினை கொண்டது. அதனை அடிப்படையாய் கொண்டே 'Geckskin' என்னும் ஒட்டக்கூடிய டேப்பினை உருவாகியுள்ளனர். * சுறா மீனின் தோலின் அமைப்பு நீரில் சுலபமாய் நீந்தும் படியும், நோய் கிருமித் தொற்று ஏற்படாத வாறும் இருப்பதை அடிப்படையாய் கொண்டே நவீன கால 'motor boat' களின் அடிப்பகுதி தயாரிக்கப்படுகின்றன. * திமிங்கல மீன்கள் தங்கள் துடுப்புகளின் முகடுகளைக் கொண்டே நீரில் இலகுவாய் நீந்தி செல்கின்றன, என்பதை கண்டறிந்த 'Frank Fish' என்பவர் சத்தத்தை குறைக்க காற்றாலைகளில் உள்ள ஃபேன்களில் அதே தொழில் நுட்பத்தை புகுத்தியுள்ளார். * டால்பின் மீன்கள் நீரில் ஒலி எழுப்பி பேசிக் கொள்வதை அடிப்படையாய் கொண்டு 'EvoLogics' என்னும் நிறுவனம் நீரில் ஏற்படும் நிலநடுக்கத்தையும், அதனால் ஏற்படும் சுனாமியையும் கண்டறியும் சென்சார்களை கண்டறிந்துள்ளது. * மின்மினி பூச்சிகள் அவற்றின் உடலில் உண்டாகும் ஒளியை அதிகப்படுத்தி வெளிவிடும் தொழில்நுட்பத்தை கொண்டு, மின்சாரம் குறைவாய் தேவைப்படும் 'LED' விளக்குகளை கண்டுபிடித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close