உலக தோற்றத்திலிருந்து இன்றுவரை மொத்த மக்கள்தொகை

  jerome   | Last Modified : 12 Nov, 2016 04:42 pm
உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பினர் நடத்திய கணக்கெடுப்பின்படி, உலகில் இன்று வரை சுமார் 108 பில்லியன்(1 பில்லியன்=100 கோடி) மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இந்த கணக்கினை கி.மு. 50,000 ஆண்டிலிருந்து தொடங்கினர். அப்போதுதான் நவீன மனிதர்கள் ஆகிய ஹோமோ செப்பியென்ஸ் தோன்றியதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதன், வாழ்க்கைக்குரிய ஆதாரங்களை பெருகிக்கொண்டே வந்ததால் நாம் தற்போது இவ்வளவு அதிகமான மக்கள் தொகையில் இருக்கிறோம். 1. கி.மு 8,000 – 5 மில்லியன் மக்கள் 2. கி.பி 1 – 300 மில்லியன் (45 மில்லியன் – ரோமன் ஆட்சிக்குரிய பகுதியில் மட்டும்) 3. கி.பி 1650 – அரை பில்லியன் 4. 19 வது நூற்றாண்டு – 1 பில்லியன் 5. இன்று – 7.1 பில்லியன் மற்றும் கூடிக்கொண்டே செல்கிறது. மொத்தமாக அனைத்தையும் சேர்த்தால் இதுவரை வாழ்ந்தவர்களுக்கான எண்ணிக்கை சரியாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வர முடிகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close