தண்ணீரின் வரலாறு

  jerome   | Last Modified : 16 Nov, 2016 12:26 pm
தண்ணீரினை அடிப்படையாக வைத்தே உலகில் உயிரினங்கள் தோன்றியிருக்கும் என்ற யூகம் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் இருக்கின்றது. தற்போதைய கண்டுபிடிப்பு ஒன்று, நமது பூமி மற்றும் பிற கோள்களில் இருப்பதாக கருதப்படும் தண்ணீர் முழுவதும் விண்வெளியில் உள்ள பனிக்கட்டிகளில் இருந்து தோன்றியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. தண்ணீரில் உள்ள ஹைட்ரஜன் மூலக்கூறின் ஐசோடோப்பான டியூட்டிரியம் பற்றி ஆராயும்போது, ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பநிலை மாற்றம் மற்றும் டியூட்டிரியத்தின் அளவு இணைந்து பனிக்கட்டிகளை கொடுக்கும் என்று தெரியவந்தது. இந்த பனிக்கட்டிகளின் பண்புகள் விண்மீன்களுக்கு இடையேயுள்ள பனிக்கட்டிகளின் பண்புகளுடன் பொருந்துகிறது. ஆனால் இது எந்த வெப்பநிலை மாற்றத்தினால் ஏற்பட்டிருக்கும், அப்போது அதில் எவ்வளவு டியூட்டிரியம் கலந்திருக்கும் என்று இன்றளவும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், சூரியன் தோன்றும் முன்பே இந்த பனிக்கட்டிகள் இருந்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிபட கூறுகிறார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close