எகிப்தில் கண்டறியப்பட்டுள்ள "மம்மி நாய்கள்"

  jerome   | Last Modified : 14 Nov, 2016 10:50 am

தொன்மையான வரலாறுகளை உடைய நாகரீகங்களில் எகிப்தும் ஒன்று. பண்டைய எகிப்தில் இறந்த மன்னர்களை "மம்மி" களாக மாற்றி புதைத்த இடம் தான் பிரமிடுகள். பிரமிடுகளில் உள்ள மர்மங்களை கண்டறிய இன்றளவும் ஆய்வுகள் நடக்கின்றன. இப்போது மனித மம்மிகள் போலவே நாய்களின் மம்மிகளும் கண்டறியப்பட்டுள்ளன. பண்டைய எகிப்தின் தலைநகரமான "மெம்பிஸ்" அருகே உள்ள இடுகாடுகளில் 8 லட்சத்துக்கும் அதிகமான நாய் மம்மிகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை கி.மு. 747-332 காலத்தை சேர்ந்தவை.நாய்களை தவிர குள்ளநரிகள், நரிகள், பூனைகள், கீரிகள் போன்றவற்றின் உடல்களும் மம்மிகளாக இருக்கின்றன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close