பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் பல்லிகள்

  jerome   | Last Modified : 14 Nov, 2016 05:20 pm

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் வாழக்கூடியவை "டிராகன்" வகை பல்லிகள். மனிதர்களுடைய X,Y குரோமோசோம்கள் போல அவைகளுக்கும் Z,W என்ற பாலின வேறுபாட்டிற்கான குரோமோசோம்கள் இருக்கின்றன. ZZ ஆணையும் ZW பெண்ணையும் குறிக்கும். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிக வெப்பம் காரணமாக ஆண் பல்லிகளின் குரோமோசோம்கள் பாதிப்படைந்து பெண்ணாக மாறுகின்றன. இப்படி இனம் மாறும் பல்லிகள் இனப்பெருக்கம் செய்ய தகுதி உடையதாகவும், பெண் பல்லிகளை விட அதிக முட்டைகளை இடக்கூடியதாக இருக்கிறதென ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் புதிய பல்லி இனங்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close