அதீத நியாபக சக்தியும் ஒரு நோயே

  jerome   | Last Modified : 15 Nov, 2016 06:01 pm
வாழ்வின் சிறு சிறு விவரங்களையும் நினைவில் கொள்வது ஒரு வகையான நோய் தான். இது "ஹைப்பர்தைமீசியா" என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் தைமீசிஸ் என்றால் “நினைவு கொள்ளுதல்” என்றும் ஹைப்பர் என்றால் “மிதமிஞ்சிய” என்றும் பொருள். இந்த வகையான நினைவினை பெற்ற மனிதர்களால் அவர்களின் தினசரி வாழ்வின் ஒவ்வொரு சிறு சிறு விவரங்களையும் நினைவுபடுத்த முடியும். அவர்களின் மூளை, முக்கியத்துவம் வாய்ந்த சிறு தகவல்களையும் சேமித்து வைக்கும். இந்த மன நிலையால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதுமே தன்னால் கடந்த கால விஷயங்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது என்றும் அதற்காக எந்த தனிப்பட்ட முயற்சியும் செய்யவில்லை என்றும் கூறுகின்றனர். அவர்களால் குறிப்பிட்ட நாட்கள், இடங்கள், நேரம் ஆகியவற்றை நினைக்கும்போது அவற்றை தெளிவான காட்சிகளாக தொடர்புபடுத்த முடிகிறது. ஹைப்பர்தைமீசியா பாதிக்கப்பட்ட மனிதர்கள் தனிப்பட்ட நிகழ்வுகளை நினைவு கொள்வதுபோல் மனனம் செய்வது போன்ற விஷயங்களில் நினைவாற்றலை செயல்படுத்துவதில்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 25 பேர் மட்டுமே இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் வாழ்வில் நடந்த எதையுமே மறப்பதில்லை. அதுவே இவர்களுக்கு பெரிய பிரச்சினை ஆகி விடுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close