தண்ணீருக்கு அடியில் வெகு நேரம் நீந்த உதவும், மூச்சுக்கருவியின் பெயர் 'ஸ்கூபா'. இதனால், ஆழ்கடலில் சென்று அங்குள்ள நிலப்பரப்புகள், கடல்வாழ் தாவரம்-உயிரினங்களை ஆராயவும், எண்ணெய் எடுப்பதற்காக ஆய்வு செய்யவும் முடியும். மேலும் இது, டால்பின்-சுறா மீன் ஆராய்ச்சி மற்றும் ராணுவத் தொடர்புகளுக்காக கப்பற்படையிலும் பெரும் பங்கு வகிக்கிறது. மூச்சுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டரும், விடும் மூச்சை வாய் வழியே வெளிவிடும் கருவியும் இதில் உள்ளது. இது ஆக்ஸிஜனை மட்டும் உள்ளே அனுமதிப்பதால், நெடு நேரம் ஆழ் கடலில் நீந்த உதவுகிறது.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.