இலவசமாக கிடைக்கும் போதைப்பொருள்

  jerome   | Last Modified : 15 Nov, 2016 07:38 pm

போதைப்பொருட்கள் எடுத்துக்கொள்ளும் போது நம் மூளையில் "டோபாமைன்" எனும் வேதிப்பொருள் சுரந்து நம்மை வானத்தில் மிதப்பது போல் மாயையை உருவாக்குகின்றது. இதே டோபோமைன் தான் நாம் இசையை கேட்கும்போதும் சுரக்கின்றது. போதைப்பொருட்கள் நம்மை அடிமை ஆக்குவது போல் இசையும் ஒரு விதமாக அடிமை ஆக்கிவிடுகின்றது. டோபோமைன் அளவு அதிகரிக்கும் போதெல்லாம் நம்மால் மகிழ்ச்சியாக இருக்க முடிகின்றது. இசையை தவிர்த்து ஓவியம், கவிதை, நடனம்,உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றின் மூலம் இதன் சுரக்கும் அளவை கூட்ட முடியும். நம் உடலில் இருக்கும் இலவச போதையை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close