பார்வை இழந்தவர்கள் பார்ப்பதற்காக புது தொழில்நுட்பத்தை கண்டறிந்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள். இதற்கு "பயோனிக் ஐ" என்று பெயரிட்டுள்ளனர். பார்வையற்றவரின் மூளைப்பகுதியில் சிறிய எலக்ட்ரிக் ராடுகளை பொருத்தி அதனால் பார்வை நரம்பு செல்களை தூண்டுவதால் இது சாத்தியமாகிறது. இம்முறை "ஓரியன்-1" என அழைக்கப்படுகிறது. இதற்குமுன் "ஆர்கஸ்-2" முறையில் இது சாத்தியப்படவில்லை. காரணம், அதற்கு பார்வை செல்களான "ரெட்டினால்" சிறிதேனும் உயிர்ப்புடன் இருக்க வேண்டி இருந்தது. புது முறையை பார்வையற்றரிடம் செயல்படுத்தியதில் அவரால் நிறங்களை அறிய முடிந்தது.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.