சமீப ஆய்வில், சிலர் இரவில் நெடு நேரம் விழித்திருப்பதற்கு காரணம் அவர்களின் மரபணுவே என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சாதாராணமானவர்களைக் காட்டிலும் இரவில் கண் விழிப்பவர்கள் அதிக செயல் திறன் கொண்டவர்களாக விளங்குவதும், 10 மணி நேர வேலைக்கு பின்னரும் புத்துணர்வுடன் விளங்குவதும் தெரிய வந்துள்ளது. அதோடு இரவில் விழிப்பவர்கள் அதிக படைப்பாற்றல் கொண்டவர்களாகவும் விளங்குகிறார்களாம். இதற்கு காரணம் இரவு நேரத்தில் நிலவும் நிசப்தமான சூழ்நிலை கணினி, எழுத்து, வடிவமைப்பு ஆகிய துறை சார்ந்தவர்களுக்கு ஏற்றதாய் திகழ்வதே ஆகும்.