உலகெங்கும் 36 மில்லியன் மக்கள் HIV-யால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களின் உடலில் உள்ள HIV-ன் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். அதற்காக பயன்படுத்தப்படும் மருத்துவமுறை அதிக செலவையும், நேர விரயத்தையும் உண்டாக்குகின்றது. இதை, சரிபடுத்த புதியமுறை கொண்டுவரபட்டுள்ளது.
இந்தமுறை சக்கரை நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வீட்டிலிருந்தே தெரிந்துகொள்ளும் USB STICK முறை போன்றது. HIV-யால் பாதிக்கப்பட்டவரின் இரத்தத்துளிகளை USB STICK-ல் வைக்கும் போது அதன் அமிலத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டு எலக்ட்ரிக் சிக்னல்களை தூண்டுகின்றது. இவை, அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்ப்யூட்டரில் HIV-ன் அளவை காட்டுகின்றது.
இந்த முறையின் மூலம், இதுவரை 991 இரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 95% துல்லியமாக இருந்துள்ளது. இப்பரிசோதனையை செய்து முடிக்க 20.8 நிமிடங்களே போதுமானது.