உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம் (WMO) வெளியிட்டுள்ள அறிக்கையில் 2016-ஆம் ஆண்டு அதிக வெப்பமான ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் வெப்பநிலை 2.2 டிகிரி ஃபாரன் ஹீட் (1.2 டிகிரி செல்சியஸ்) அதிகரித்து உள்ளது. பூமியின் வெப்பநிலை 2015 மற்றும் 2016 ல் வானிலை ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்த்ததை விட கணிசமாக உயர்ந்து இருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது. கார்பன்-டை-ஆக்ஸைடின் அளவு அதிகரிப்பதே இதற்கு காரணம். இதனால், ஆர்க்டிக் கடல் பகுதியில் பனிப்பாறைகள் அளவு குறைந்து கடல் நீர்மட்டம் உயரும் என்றும் எல்-நினோ பாதிப்புகள் உண்டாகும் என்றும் கூறுகின்றனர்.