ஸ்மார்ட்போன் தண்ணீல விழுந்துடுச்சா? இத செய்யுங்க...

  varun   | Last Modified : 17 Nov, 2016 07:22 pm
தண்ணீரில் விழுந்து ஸ்மார்ட்போன் பாதிப்படைந்தால் தீர்வு காண சில ஸ்மார்ட் டிப்ஸ்: * சில ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் விழுந்தாலும் சேதம் அடையாமல் இருக்கவும், தண்ணீரால் சேதம் அடைந்தால் அதை தெரிவிக்கவும் சில குறிகாட்டிகளை கொண்டு வடிவமைத்துள்ளனர். மொபைல் போன் தண்ணீரில் விழுந்து பாதிப்படைந்தால் அந்த குறிகாட்டிகளில் பிங்க் அல்லது சிவப்பு நிறத்தில் குறியீடு காட்டும். சில சமயங்களில் அது வெள்ளை நிறத்தில் கூட எறியலாம். அப்படி குறீயீடுகள் தெரிந்த பின் உடனடியாக நம்முடைய போனில் உள்ள பேட்டரியை கழற்றி உலர செய்தல் வேண்டும். * மொபைல் போர்ட் மற்றும் ஜாக் உள்ள இடங்களில் ஈரப்பதம் இல்லாமல் உலர விட வேண்டும். மொபைல் கவர், பேட்டரி கவர், பேட்டரி, சிம் கார்ட், மெமரி கார்ட் போன்ற அனைத்தையும் முற்றிலும் கழற்றி ஈரத்தை உலர்த்த வேண்டும். இதற்காக ட்ரையர் பயன்படுத்துதல் தவறானது. எனவே ட்ரையர் மூலம் ஈரத்தை உலர்த்த கூடாது. ஏனெனில் ட்ரையர் மொபைல் போனின் சில பகுதிகளைப் பாதிக்கலாம். * தண்ணீரில் விழுந்து பாதிப்படைந்த உடன் மொபைல் போனை சார்ஜ் போடவோ அல்லது சுவிட்ச் ஆன் பண்ணவோ கூடாது. போனில் உள்ள பேட்டரியை கழற்றி மற்றொரு போனில் அதனை இயக்க செய்தல் அவசியம். அப்போது தான் பேட்டரி பழுதடைந்ததா என்பதை அறிய முடியும். சில வகை பிரத்யேக மொபைல் போன்களில் பேட்டரியிலேயே இத்தகைய குறிகாட்டிகள் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் அந்த பேட்டரி பாதிப்படைந்துள்ளது என்பதை அறியலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close