மின்னலின் வெப்பநிலை எவ்வளவு?

  jerome   | Last Modified : 17 Nov, 2016 05:09 pm
இயற்கையின் மிகப்பெரிய சக்திகளில் மின்னலும் ஒன்று. புயல்,சுனாமி போல மின்னலும் அதிக பாதிப்பை உண்டாக்குகிறது. நாள் ஒன்றுக்கு 1 லட்சம் மின்னல்கள் பூமியை தாக்குகின்றன. அதிக மின்சக்தியை கொண்டிருக்கும் மின்னலின் வெப்பநிலை எவ்வளவு என சீனாவை சேர்ந்த மின்னல் ஆராய்ச்சியாளர் சியாங் சூ லீயும் அவர் குழுவினரும் கண்டறிந்துள்ளனர். இதற்காக IMPULSE CURRENT GENERATOR முறைப்படி செயற்கையான மின்னலை உருவாக்கி வெப்பநிலையை அறிந்துள்ளனர். ஒரு மின்னல் 17,000 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பத்தை உண்டாக்குகின்றது. இது, சூரியனின் மேற்பரப்பில் நிலவும் வெப்பநிலையை விட அதிகமாகும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close