கடல் நீரிலிருந்து குடிநீர் - எளிய தொழில்நுட்பம்

  jerome   | Last Modified : 17 Nov, 2016 04:11 pm

ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்புப்படி 2030-ல் உலக மக்கள்தொகையில் பாதிக்கு அதிகமான பேர் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து தப்பிக்க உலகநாடுகள் அனைத்தும் கடல்நீரை குடிநீராக மாற்றுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.அதற்காக இப்போது பயன்படுத்தப்பட்டு வரும் தொழில் நுட்பமானது, அதிக செலவையும் கடல் வாழ் உயிரினங்களுக்கு மிகுந்த பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. சென்ற வருடம் அமெரிக்காவில் நிறுவப்பட்ட கடல்நீரை குடிநீராக மாற்றும் நிலையத்தின் மதிப்பு சுமார் 4000 கோடி ஆகும். இதற்கு மாற்றாக சூரிய ஒளியின் மூலம் கடல் நீரில் இருக்கும் உப்புத்தன்மையை நீக்கி, சுவையான நீரை பெறும் எளிய தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதனால், பல கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்படும். ஆய்வக அளவில் நிரூபிக்கப்பட்டுவிட்ட இந்தமுறையானது இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அதற்காக 8,25,000 டாலர்கள் ஒதுக்கப்பட்டு ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இம்முறைக்கு கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் "Moore Inventor Fellow" என்று பெயரிடப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close