வீடுகளில் வளர்க்கப்படும் செடிகளில் இருந்து மொபைல் போன்களுக்கு சார்ஜ் ஏற்றும் நவீன தொழில்நுட்பத்தை ஐரோப்பிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்கு BIOO-LITE என்று பெயரிட்டுள்ளனர். தாவரங்களில் ஒளிசேர்க்கையின் போது தண்டுகளில் உள்ள MICRO ORGANISM வெளியிடும் சக்தியின் மூலம் மின்சாரத்தை பெறமுடியும். ஒரு தாவரத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 3.5 வோல்ட் (அ) 500 மி.ஆம்ப்ஸ் மின்சாரம் கிடைக்கின்றது. இரவிலும் பயன்படுத்தக்கூடிய இந்த முறையின் மூலம் மின்சாரத்துறையில் புதிய மாற்றங்கள் உண்டாகும் என ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.