பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெட்ரோல் தயாரிப்பு- இந்தியா

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் பெட்ரோலியம்- டேராடூன் விஞ்ஞானிகள், பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் பெட்ரோலிய மூலப்பொருட்களைப் பெறமுடியும் என கண்டறிந்துள்ளனர். GREEN TECHNOLOGY என அழைக்கப்படும் இம்முறை ஜப்பான்,ஜெர்மனி,அமெரிக்காவில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. இனி வரும் காலங்களில் இந்தியாவிலும் இது சாத்தியம் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், இதை விரைவில் நடைமுறைப்படுத்த காப்புரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர். இந்த முறையின் மூலம் டீசல், கேசோலைன், LPG போன்ற இதர எரிபொருள்களும் பெறப்படும். தற்போது, பயன்படுத்தப்படும் பெட்ரோலை விட குறைவான அளவு புகையும், அதிக மைல்லேஜ்ஜும் கிடைக்கும். இதனால், இந்தியாவின் சுற்றுசூழல் சீர்கேட்டிற்கு பெரும் சவாலாக இருந்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close