பூமியில் உள்ள மற்ற உயிரினங்கள் பிறந்த சில மணி நேரங்களில் எழுந்து நின்று ஓடி விளையாடுகின்றன. ஆனால், மனித இனம் எழுந்து நிற்பதற்கே 1 வருட காலம் தேவைப்படுகின்றது. இதற்கு, நான்கு கால்களை உடைய குரங்கினத்திலிருந்து, பல லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு பரிணாம வளர்ச்சி அடைந்து மனித இனம் உருவானது என்ற காரணம் முன் வைக்கப்பட்டாலும், உண்மையில் நம் உடலின் நடை இயக்கமானது மூளையின் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது என ஆய்வாளர்கள் விளக்கம் தருகின்றனர்.
பிற உயிரினங்களின் மூளை, கருவில் இருக்கும்போதே முழுமையாக வளர்ச்சி அடைந்து விடுகின்றது. ஆனால், குழந்தைகளின் மூளை, நடப்பது, ஓடுவது போன்ற இயற்பியல் இயக்கங்களுக்கு தயாராக இருப்பதில்லை. மேலும், இந்த இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும் இடுப்பு எலும்புகளின் பகுதியும் வலுவின்றி இருக்கும். “plantigrade stance” எனப்படும் இதற்கு நம்முடைய பாதங்களின் எலும்பின் வலுத்தன்மையும் முக்கியம். எனவே தான், குழந்தைகள் நடைபயில தாமதமாகிறது.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.