2015-ல் அண்டார்டிகாவின் Pine Island Glacier எனும் 225 சதுர மைல் பரப்புள்ள பனிப்பகுதியில் சுமார் 20 மைல் தூரத்திற்கு விரிசல் ஏற்பட்டிருந்தது. SATELLITE IMAGERY முறையில் இதை ஆராய்ந்த நிலவியல் ஆராய்ச்சியாளர்கள், புவி வெப்பமாதலால் கடல் நீரின் வெப்பமும் அதிகரிப்பதாகவும், இதனால் கடல் அடியில் இருக்கும் பனிப்பாறைகளில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர். இந்நிலை தொடர்ந்தால், பனிப்பாறைகள் முற்றிலும் உருகி இன்னும் 100 ஆண்டுகளுக்குள் கடல் நீர்மட்டம் 10 அடிகள் வரை உயர வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கின்றனர்.