10 லட்சம் கூகுள் கணக்குகளை திருடிய "கூலிகன்" மால்வேர்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

Check Point Software Technologies எனும் இணைய பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "கூலிகன்"(Gooligan) எனும் மால்வேர் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கூகுள் கணக்குளை திருடி இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு ஜெல்லி பீன், கிட்கேட் மற்றும் லாலிபாப் இயங்குதளம் கொண்ட மொபைல்களை தாக்கும் இந்த மால்வேர் அவற்றில் இருந்து இமெயில் தகவல்களை எடுத்து அதன் மூலம் Gmail, Google Photos, Google Docs, Google Play, Google Drive, மற்றும் G Suite போன்றவற்றில் உள்ள தகவல்களை ஹேக்கர்களுக்கு அனுப்புகிறது. தினம் தோறும் 13000 மொபைல்களை இந்த மால்வேர் தாக்குவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த மால்வேர் தாக்குதலுக்கு ஆளான ஆப்களை இன்ஸ்டால் செய்வதாலோ அல்லது இதோடு தொடர்புடைய இணையதள லிங்க்களை உபயோகிப்பதாலோ இந்த மால்வேர் மொபைல்களில் எளிதில் புகுந்து விடுகிறது. ஒரு முறை மொபைலில் நுழைந்ததும் கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள ஆப்களை தானாக தரவிறக்கம் செய்வதோடு அவற்றிக்கு ரேட்டிங் கொடுத்து அதன் மூலம் ஹேக்கர்கள் பணம் சம்பாதிக்க உதவுகிறது. இவ்வாறாக தினம் தோறும் 30,000 ஆப்களை பாதிக்கப் பட்ட மொபைல்களில் இன்ஸ்டால் செய்துள்ளது. இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான ஆப்கள் இவ்வாறு இன்ஸ்டால் செய்யப் பட்டுள்ளன. ஆண்ட்ராய்டு மொபைல்கள் இந்த மால்வேரால் பாதிக்கப் பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்கவும் Check Point Software Technologies தற்போது இலவசமாக ஆப் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்நிறுவனத்துடன் இணைந்து இந்த மால்வேரை அகற்றுவதற்கான பணியில் இறங்கி உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.