தரையிறங்காமல் தொடர்ச்சியாக பத்து மாதங்கள் வரை பறந்து கொண்டே இருக்கும் குருவி இனத்தை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். SWIFT எனும் இவ்வகை குருவிகள் பறந்துகொண்டிருக்கும் போதே, உணவை உட்கொள்ளவும், இணை சேரவும் செய்கின்றன. குஞ்சுகள் பொரிப்பதற்காக மட்டுமே தரைக்கு வரும் இவை, தூங்குகின்றனவா என்பது இன்னும் அறியப்படாமல் உள்ளது. ஒரு சில ஆராய்ச்சியாளர்கள், இக்குருவிகள் டால்பின்களைப் போல மூளைக்கு மட்டும் ஓய்வு கொடுத்துவிட்டு, உடலினை தொடர் இயக்கத்தில் வைத்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.