கூகுள் மேப்ஸ்க்கு சவாலாக ஆப்பிளின் புதிய இலக்கு

  mayuran   | Last Modified : 03 Dec, 2016 12:24 am

தற்போது நாம் தெரியாத இடங்களுக்குச் செல்ல வேண்டுமானால் யாரிடமும் வழி கேட்க தேவையில்லை, உடனே கூகுள் மேப்ஸ் நமக்கு வழி காட்டி விடுகிறது. இதற்குச் சவால் விடும் விதமாக ஆப்பிள் ஆளில்லா டிரோன்கள் மூலம் இன்டோர் நேவிகேஷன் சேவையைச் சிறப்பாக வழங்க முடிவு செய்துள்ளது. அதாவது டிரோன்களின் உதவி கொண்டு மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான ஷாப்பிங் மால்கள், அருங்காட்சியகம், ஏர்போர்ட் போன்றவற்றின் உள்கட்டமைப்புகளை 360 டிகிரி போட்டோ மூலம் பார்க்க உதவுகிறது. இதில் குறிப்பாக சாலைகளில் உள்ள வழித்தடங்களைத் தெளிவாக அடையாளம் காணவும் மேலும் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களின் விபரங்களைத் தினசரி அப்டேட் செய்யும்படி வடிவமைக்கப் படவுள்ளது. ஆனால் இந்தச் சேவைக்கு சில சிக்கல்களும் எழுந்துள்ளது. சட்டப்படி டிரோன்களுக்கு கட்டுப்பாடு விதிக்காத நாடுகளிலையே இது முதலில் சாத்தியமாகும் என்பதால் இந்தச் சேவையை விரைந்து முடிக்க ஆப்பிள் நிறுவனம் ரோபோட்டிக் நிபுணர்களை இணைத்துள்ளது. அமெரிக்காவில் கூட டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த வருடம் ஆப்பிள் நிறுவனத்திற்காகத் தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close