எய்ட்ஸ் நோய்க்கான மருந்து தயாரிப்பில் முதற்கட்ட வெற்றி

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
உயிர்கொல்லி நோயான எய்ட்ஸால் இதுவரை உலகெங்கிலும் 40 லட்சம் மக்கள் இறந்தும், 35 லட்சம் மக்கள் பாதிப்பிலும் உள்ளனர். இந்நோய்க்கான தடுப்பு மருந்துகள் தயாரிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் முனைப்போடு செயல்பட்டு வரும் நிலையில், லண்டனைச் சேர்ந்த Western’s Schulich School of Medicine & Dentistry கல்லூரி மருத்துவர்கள் நடத்திய ஆய்வு முதல்கட்ட வெற்றி அடைந்துள்ளது. HIV- க்கு எதிராக அவர்கள் கண்டறிந்த SAV001 எனும் தடுப்பு மருந்தினை 300 எய்ட்ஸ் நோயாளிகளுக்கு செலுத்தியதில், அந்நோயின் தாக்கம் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இரண்டாம் கட்ட சோதனையை செயல்படுத்த FDA-ன் அனுமதிக்காக காத்திருக்கின்றனர். SAV001 தடுப்பு மருந்தானது போலியோ, ரேபிஸ், ஃப்ளூ போன்றவற்றின் தடுப்பு மருந்துகளை போல விரைவாக செயல்பட்டிருப்பதால் மருத்துவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close