உலகெங்கும் கோடிக்கணக்கில் பயனாளர்களை கொண்டுள்ள கூகுள் நிறுவனத்தில் 60 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். இந்நிறுவனத்திற்கான மின்சார பயன்பாடு 44% சூரிய ஒளி மற்றும் காற்றாலை மூலம் பெறப்படுகின்றது. 2017-ல் இது 100 சதவீதமாக உயரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், அணு மின் நிலையங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு குறைக்கப்படுவதோடு, அதற்கான செலவுகளும் மிச்சமாகும். மட்டுமின்றி, க்ரீன் ஹவுஸ் வாயுக்களின் அளவையும் கட்டுக்குள் கொண்டு வர முடியுமென்பதால், புவி வெப்பமாதலும் குறைக்கப்படும்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.