விண்வெளியில் குப்பை அள்ளும் ஜப்பான் செயற்கைக் கோள்

  shriram   | Last Modified : 09 Dec, 2016 10:57 pm
ஜப்பான் நாட்டு விண்வெளி ஆராய்ச்சி கூடம், இன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு செயற்கைக்கோளை அனுப்பபியுள்ளது. விண்வெளியில் அதிகரித்து வரும் இயந்திர குப்பைகளை குறைப்பது தான் இந்த விசேஷ செயற்கைக் கோளின் வேலை. 1957ல் ரஷ்யா தொடங்கி, இன்றுவரை விண்வெளிக்கு பல்வேறு நாடுகள் ஆயிரக்கணக்கான செயற்கைக் கோள்களை அனுப்பி வருகின்றன. வேலை முடிந்தவுடன் சில கோள்கள் பூமியில் விழுந்து, தரையைத் தொடும் முன் ஏரிகல் போல எறிந்துவிடும். ஆனால், பெரும்பாலான கோள்கள் செயலிழந்த பின்னும், வட்டப்பாதையில் உலகை சுற்றிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பல, மற்ற கோள்கள் மீது இடித்து, உடைந்து, நிலையான ஒரு பாதையில் வலம் வருவதனால், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பூமியை சுற்றிக்கொண்டே இருக்கும். தற்போதைய கணக்கின் படி பூமியை சுற்றி இதுபோன்ற விண்வெளி குப்பைகள் கிட்டத்தட்ட 10 கோடி துண்டுகள் இருக்குமாம். இவற்றால், இனி வருங்காலத்தில் அனுப்பும் செயற்கைக் கோள்கள் மற்றும் விண்வெளி ஓடங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், இவற்றை குறைக்க விஞ்ஞானிகள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதில் ஒன்றாக ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி கூடம், விசேஷ வலை ஒன்றை உருவாக்கி, அதை வைத்து இதுபோன்ற குப்பைகளை பிடித்து பூமியை நோக்கி அனுப்பவுள்ளது. ஒரு மீன் வலை தயாரிக்கும் நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை அவர்கள் செயல்படுத்தியுள்ளனர். எஃகு மற்றும் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த வலைகள், மின்சாரத்தை பயன்படுத்தி அந்த குப்பைகளின் வேகத்தை குறைக்குமாம். தற்போது 700 மீட்டர் நீளம் கொண்ட இந்த வலை ஒரு துவக்கம் தான். இது வெற்றி பெற்றால் வருங்காலத்தில் 5,000 முதல் 10,000 மீட்டர் நீளமுள்ள வலைகளை அனுப்பவேண்டும். அப்போது தான் போதிய அளவு குப்பைகளை அகற்ற முடியும், என்கிறார்கள் ஜப்பான் விஞ்ஞானிகள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close