நட்சத்திரங்களுக்கு பாயும் அதிவேக விண்கலம்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா, மற்றும் விஞ்ஞானி ஸ்டீவன் ஹாக்கிங் இணைந்து நட்சத்திரங்களை சென்றடையும் அதிவேக விண்கலத்தை உருவாக்க உள்ளனர். வெற்றியடைந்தால், ஒளியின் ஐந்தில் ஒரு பங்கு வேகத்தில் இந்த விண்கலம் செல்லுமாம். விரல் அளவே இருக்கும் இந்த சிறிய விண்கலங்கள் நானோகிராப்ட் வகையை சேர்ந்தது. இதற்கு 'ஸ்டார்சிப்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது பூமிக்கு அருகில் உள்ள 'ப்ராக்சிமா சென்ச்சூரி' என்ற நட்சத்திரத்திற்கு 20 வருடங்களில் சென்றுவிடும். 'பிரேக்த்ரூ ஸ்டார்ஷாட்' என்ற இந்த திட்டத்தை ஸ்டீவன் ஹாக்கிங் மற்றும் கோடீஸ்வரர் யூரி மில்னர் இணைந்து சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தினர். கொரிய விஞ்ஞானிகளுடன் இணைந்து ஹாக்கிங் இந்த நானோகிராப்ட்டை திட்டமிட்டார். அதிவேகத்தில் செல்லக் கூடியதாக இருந்தாலும், விண்ணில் அதிக கதிர்வீச்சு உள்ள சில இடங்களின் அருகே செல்லும்போது, அதன் எந்திரங்கள் பாதிக்கப்படும் என்ற குறைபாடு இருந்தது. அதனால் தான் நாசா விஞ்ஞானிகள், இந்த குறைபாடை நீக்கி, கதிர்வீச்சை தாங்கும் தொழில்நுட்பம் கொண்ட புதிய நானோகிராப்ட்டை உருவாக்க ஹாக்கிங்கின் அணியுடன் இணைந்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close