கனடாவில் கண்டறியப்பட்ட 250 கோடி வயதுடைய தண்ணீர்

  jerome   | Last Modified : 17 Dec, 2016 01:01 pm

கனடாவில் இயங்கி வரும் வெள்ளிச் சுரங்கத்தில், டொரோண்டோ பல்கலைக்கழக நிலவியல் நிபுணர்கள் நடத்திய ஆய்வில் 250 கோடி ஆண்டுகள் வயதையுடைய நீர் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதே சுரங்கத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் 150 கோடி ஆண்டுகள் பழமையுடைய நீர் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நீரில் உலோகக் கலவைகள் கலந்திருப்பதாகவும், விஷத்தன்மை எதுவும் இல்லையென்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதே போல் பூமியின் பல பகுதிகளில் நீர் இருக்கலாம் என்று கருதுகின்றனர். இந்த ஆய்வை அடிப்படையாகக் கொண்டு பிற கோள்களில் உள்ள நீரினை கண்டறிய முடியுமென நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close