மொபைல் போன்களுக்கு சில வினாடிகளில் சார்ஜ் ஏற்றும் தொழில்நுட்பம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மொபைல் போன்களில் பேட்டரிகளுக்கு பதிலாக "SUPER CAPACITORS" களை பயன்படுத்தினால் மிகக் குறைந்த நேரத்தில் சார்ஜ் ஏற்றிவிட முடியுமென்று மத்திய ஃபுளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதுபற்றி விஞ்ஞானிகள் குழுவில் உள்ள நிதின் சௌத்ரி கூறுகையில் "நானோ வயர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட SUPER CAPACITORS கள், இப்போது பயன்படுத்தபட்டு வரும் லித்தியம் பேட்டரிகளை விட ஆற்றல் கொண்டதாகவும், ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் ஒரு வாரம் வரை பயன்படுத்த முடியும்" என்று தெரிவித்துள்ளார். மொபைல் போன்களுக்கு மட்டுமல்லாது, எலக்ட்ரிக் கார்கள் போன்ற மின்சார சாதனங்களிலும் இவ்வகை பேட்டரிகளை பயன்படுத்த முடியும். காப்புரிமை பெறுவதற்காக விண்ணப்பிக்கப் பட்டுள்ள இவை, விரைவில் சந்தைக்கு வருமென்று எதிர்பார்க்கப் படுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close